Dec 29, 2009

அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து , Fire fox

http://tomuse.com/wp-content/uploads/2009/11/firefox-logo.png
தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு போட்டியாக இயங்கும் பயர்பாக்ஸ் பிரவுசர், பல புதிய வழிகளில் மேம்பாடு அடைய உள்ளது. மொஸில்லா தன் இணைய தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் இரண்டு நிலைகளில் ஏற்படுத்தப் படும். முதல் நிலை மாற்றங்கள் பயர்பாக்ஸ் பதிப்பு 3.7ல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தரப்படும். மற்ற மாற்றங்கள் அனைத்தும் பயர்பாக்ஸ் தொகுப்பு 4ல் ஏற்படுத்தப்படும்.
பிரவுசர்களுக்கிடையேயான போட்டியில் தன் பயர்பாக்ஸ் நல்லதொரு இடத்தைப் பிடித்து வருவதனை மொஸில்லா நன்கு உணர்ந்துள்ளது. எனவே தான் எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி பல வசதிகளைத் தொடர்ந்து சேர்த்து வழங்கி வருகிறது.
தற்போதைய பயர்பாக்ஸ் முகப்பு தோற்றம் மிகப் பழமையாக இருப்பதாக மொஸில்லா எண்ணுகிறது. முகப்பு தோற்றத்தில், விஸ்டா தொகுப்பில் வந்த கிளாஸ் ஸ்டைலில் முதல் மாற்றம் இருக்கும் Page  மற்றும் Tools  என இரண்டு பிரிவுகள் மட்டுமே உள்ளதாக மெனு மாற்றி அமைக்கப்படும். Stop மற்றும் Reload ஆகிய இரண்டும் ஒரே பட்டனில் தரப்படும். மெனு பார் மறைக்கப்பட்டு ரிப்பன் ஸ்டைல் மெனு தரப்படும் என முன்பு அறிவித்தபோது பலத்த எதிர்ப்பு இருந்ததால், அதனைக் கைவிட்டுவிட்டது மொஸில்லா.
அட்ரஸ் பார் மற்றும் சர்ச் பார் ஒரே கட்டத்தில் தரப்படும். ஸ்டேட்டஸ் பார் எடுக்கப்படும். இவை எல்லாம் குரோம் பிரவுசர் போல தோற்றத்தைத் தருவதற்கான முயற்சிகள் என்று சிலர் கூறிய போது, மொஸில்லா அதனை வன்மையாக மறுத்து பயர்பாக்ஸ் எப்போதும் பயர்பாக்ஸ் போலத்தான் தோற்றமளிக்கும் எனக் கூறப்பட்டது.
அனைத்து பிரவுசர்களும் ஒரே மாதிரியான வேலையை மேற்கொள்வதால், சில வேளைகளில் இவை ஒன்றுக்கொன்று மற்றதைக் காப்பி செய்வது போலத் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் ஒவ்வொரு பிரவுசரும் தனக்கென்று ஒரு தனித் தோற்றத்தைக் கொண்டுள்ளதை மறுக்க முடியாது.
பிரவுசர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டியில், இன்னும் இன்டர்நெட் தான் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6ஐப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை யைக் காட்டிலும் கூடுதலானவர்கள் பயர்பாக்ஸினைப் பயன்படுத்துகின்றனர்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, பலர் பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தாவியதற்கு முக்கிய காரணம், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல இடங்கள் ஹேக்கர்களுக்குச் சாதகமாக இருந்ததுதான். ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது. இணைய பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்திடும் ஸென்ஸிக் என்ற அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வில், பயர்பாக்ஸ் பிரவுசர் தான் ஹேக்கர்கள் காணும் பலவீனமான இடங்களைக் கொண்டிருப்பதில் முதல் இடம் பெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதன் பாதுகாப்பற்ற தன்மை 44 சதவீதம், சபாரி 35சதவீதம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 15சதவீதம் என அறிவித்துள்ளனர். இந்த ஆய்வின் நம்பகத் தன்மை இப்போது கேள்விக் குறியாகி இருந்தாலும், பயர்பாக்ஸ் ஏற்றுக் கொள்ளும் ப்ளக் இன் புரோகிராம்கள்தான் இந்த பாதுகாப்பற்ற தன்மையினைத் தருவதாக தெரியவந்துள்ளது. ஆனால், பயர்பாக்ஸ் உடனே தன் பிரவுசரில் இருந்த பலவீனமான இடங்களைச் சரி செய்துவிட்டது.
பயர்பாக்ஸ் 3.6 பீட்டா 2
பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள், இதன் பதிப்பு 3.5 னைத்தான் அதிகமாகப் பயன்படுத்து கின்றனர் என்றாலும், பலரும் ரிஸ்க் எடுத்து பயர்பாக்ஸ் 3.6 சோதனைத் தொகுப்பினையும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கான சோதனைத் தொகுப்பு 2 அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் 190 பிரச்னைகள் சரி செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்ற வாரம் வெளியான பயர்பாக்ஸ் 3.6 சோதனை பதிப்பு, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் சில புதிய வசதிகளுக்கு இணைந்து வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏரோ பீக், டாஸ்க்பார் தம்ப்நெயில் பிரிவியூ போன்றவற்றை இதற்கு எடுத்துக் காட்டுக்களாகக் கூறலாம். ஆனால் விண்டோஸ் 7 தரும் ஜம்ப் லிஸ்ட்டின் வசதிகள் பயர்பாக்ஸ் பதிப்பில் இல்லை.
குறிப்பாக இதனுடன் இயங்க முடியாமல் இருக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களால், பயர்பாக்ஸ் கிராஷ் ஆவது தடுக்கப்பட்டுள்ளது.
பிரவுசரின் தோற்றத்தினை பயன்படுத்துபவர்கள் எளிதில் மாற்ற பெர்சனா என்ற டூலை மொஸில்லா வழங்கியது. இந்த தொகுப்பில் இன்னும் பல ஸ்கின்கள் தரப்பட்டுள்ளன. இப்போது பெர்சனாவில் ஒரே கிளிக் செய்வதன் மூலம் பயர்பாக்ஸ் தோற்றத்தினை மாற்றுவதற்கு வழி தரப்பட்டுள்ளது. வீடியோக்களை இயக்குகையில் முழு திரையிலும் பார்க்க வழி அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்து பவர்களுக்கு, பழசாகிப் போன, பயன்படுத்த முடியாத ப்ளக் இன் புரோகிராம்கள் குறித்த அறிவிப்பு வழங்கப்படுகிறது. ஆட் ஆன் தொகுப்புகள் புதிய பிரவுசர் தொகுப்பிற்கு ஏற்றவைதானா என்று அறிய ஆட் ஆன் கம்பாடிபிளிட்டி ரீடர் என்னும் புரோகிராம் டவுண்லோட் செய்து பயன்படுத்தும் வகையில் தரப்படுகிறது.
கம்ப்யூட்டரிலிருந்து பைலை பிரவுசரின் அட்ரஸ் பாரில் போட்டு திறக்க வழி செய்யப்பட்டுள்ளது.
மொஸில்லா என்ன செய்ய வேண்டும் என்பதனை கூகுள் தந்த குரோம் பிரவுசர் சுட்டிக் காட்டியது. அதே போல குரோம் பிரவுசரில் இருந்த புதிய வசதிகளை பயர்பாக்ஸ் தரத் தொடங்கியது. பிரவுசர் யுத்தத்தில் பயர்பாக்ஸ், குரோம் பிரவுசரை எதிர் கொண்டாலும், ஓப்பன் சோர்ஸ் அமைப்பில் இரண்டும் ஒரே மாதிரியான செயல்பாட்டினையே மேற்கொண்டுள் ளன என்பது குறிப்பிடத்தக்கது. எச்.டி.எம்.எல். வசதியை புரோகிராமிங் மற்றும் டிஸ்பிளேவுக்கான வலிமையான சாதனமாகக் கொண்டு வருவதில் இரண்டும் செயல்படுகின்றன.
பயர்பாக்ஸ் 3.7 அடுத்த 2010 ஆம் ஆண்டின் நடுவிலும், பதிப்பு 4 அடுத்து ஒரு ஆண்டிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலாகப் புதிய வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இணைய வேகம் சரிதானா?

http://palprince.com/softwares/wp-content/uploads/2008/06/speedtestnet.jpg
பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் கண்டிஷன்களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம். உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின் http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.
அடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட் மோடம் தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை; அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை.

Dec 28, 2009

இணைய வேகம் சரிதானா?

http://palprince.com/softwares/wp-content/uploads/2008/06/speedtestnet.jpg
பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனங்கள் பல்வேறு கட்டணங்களுடனும், விதம் விதமாய் கண்டிஷன்களுடனும் நமக்கு இணைப்பு தருகின்றன. மற்ற எதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், நம்மிடம் வாங்கும் கட்டணத்திற்கேற்ற வேகத்தில் இணைப்பு கிடைக்கிறதா என்று இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை நாம் கணக்கிட்டுப் பார்த்து அறிய வேண்டும். இதனை எந்த வழியில் அறியலாம் என்று பார்க்கலாம். உங்கள் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை அறிய, முதலில் இணைப்பை இயக்குங்கள். பின் http://speedtest.net/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு வேகத்தைச் சோதனை செய்வதற்கான தொடர்பில் கிளிக் செய்தால், உடனே உங்கள் பிராட்பேன்ட் இணைப்பிற்கான ரௌட்டருக்கும் கம்ப்யூட்டருக்குமான வேகத்தையும், இன்டர்நெட் டவுண்லோட் ஸ்பீடையும் அது அளந்துகாட்டும். கீழாக உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் பெயருடன், இணைப்பின் தன்மையை நட்சத்திரக் குறியிட்டுக் காட்டும். அதிலேயே வரைபடம் ஒன்று காட்டப்பட்டு அதில் இணைய இணைப்பினை நீங்கள் பெறும் நகரம் சுட்டிக் காட்டப்படும்.
அடுத்ததாக, நீங்கள் இன்டர்நெட் இணைப்பு பெற்று சில ஆண்டுகள் கழிந்திருந்தால், உங்களிடம் முதன் முதலில் கொடுத்த பிராட்பேண்ட் மோடம் தான் இருக்கும். இணைப்பு தரும் நிறுவனத்திடம், தற்போது அதிக வேக இணைப்பு மோடம் இருந்தால், ஒன்று உங்கள் இணைப்பிற்கென கேட்டுப் பெறவும். இன்டர்நெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் அடிக்கடி தங்களின் அடிப்படை இயக்க சாதனங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு அது போல புதுப்பித்துத் தருவதில்லை; அது குறித்த தகவல்களைக் கூடத் தருவதில்லை.

Microsoft Office 2010 தொகுப்பு 15 நாட்களில் 10 லட்சம் டவுண்லோட்


மைக்ரோசாப்ட் நிறுவனம் Microsoft Office 2010 தொகுப்பின் சோதனைத் தொகுப்பினைத் தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட 15 நாட்களில் 10 லட்சம் பேர் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தனக்கு பெருமைக்குரிய விஷயமாக மைக்ரோசாப்ட் கருதுகிறது. வரும் ஜூன் மாதம் இது பொது மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரும். ஆறு வகைகளில் (Starter, Home and Student, Home and Business, standard, Professional and Professional Plus) இது விற்பனை செய்யப்படும். இதில் ஒரு வகை வேர்ட் மற்றும் எக்ஸெல் தொகுப்புகள் அடங்கியதாகவும், அடிப்படை பயன்பாட்டி னைக் கொண்டதாகவும் கொண்டு இலவசமாகத் தரப்படும். இதில் விளம்பரங்களும் இருக்கும். வர இருக்கும் ஆபீஸ் தொகுப்பு என்ன விலையில் இருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. உங்களுக்கும் இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்க ஆசையாக இருந்தால், http://www.microsoft. com/office/2010/en/default.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இந்த ஆபீஸ் தொகுப்பில் என்னவெல்லாம் புதியதாக உள்ளன என்று தெரிய பல தளங்கள் உள்ளன. http://www.neowin. net /news/main/09/11/18/microsoftoffice2010topnewfeatures என்ற முகவரியில் உள்ள தளத்தில் சிறப்பான தகவல்கள் உள்ளன.
டெல் தரும் புதிய ஹோம் பி.சி.
இன்ஸ்பிரான் ஒன் 19 (Inspiron One 19) என்ற பெயரில் அண்மையில் டெல் நிறுவனம் ஹோம் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. வீடுகளில், சிறிய அலுவலகங்களில், மாணவர்கள் தங்கும் விடுதிகளில் வைத்து இயக்க போதுமான பெர்சனல் கம்ப்யூட்டராக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான கருப்பு வண்ணத்தில் பளபளக்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.18.5 அங்குல டிஸ்பிளேயுடன் மானிட்டர், பெண்டியம் டூயல் கோர் அல்லது கோர் 2 டுயோ ப்ராசசர் (கிராபிக்ஸ் இணைந்து) , 4 ஜிபி டூயல் சேனல் டி.டி.ஆர். 2 மெமரி, 640 ஜிபி ஹார்ட் டிஸ்க், 16 எக்ஸ் டிவிடி ஆப்டிகல் டிரைவ், ஆடியோ 2 வாட் சைட் ஸ்பீக்கர்கள், 8டிண1 மீடியா கார்ட் ரீடர்,1.3 வெப் கேமரா, மைக், 6 யு.எஸ்.பி.போர்ட் ஹெட்போன் மற்றும் மைக் ஜாக், இரண்டு பி.எஸ்.2, பேரலல் மற்றும் சீரியல் போர்ட் ஆகிய, இன்று எதிர்பார்க்கும், அனைத்து வசதிகளும் திறன் கொண்டவையாக அமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளன.

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?

http://resolverone.files.wordpress.com/2009/03/computer_crash.jpg
சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.
சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ரம் மெமரி சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
வீடியோ கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
மின் ஓட்டம்
கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கவும்.

Unmovable Files என்றால் என்ன?

http://www.lisisoft.com/imglisi/4/FileManagement/34921main.jpg
இயங்கு தளத்தினால் தற்போது பயன் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பைல்களை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறான பைல்களையே (Unmovable Files) அன்மூவபல் பைல்கள் எனப்படுகின்றன. பேஜ் (Page file) பைல் மற்றும் MFT பைல்கள் (Master File Table) என்பவற்றை iஇடமாற்றம் செய்ய முடியாத பைல்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
பிரதான நினைவகமான RAM இல் வெற்றிடம் போதுமான அளவு இல்லாத போது ஹாட் டிஸ்கில் அதற்கென ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு ஹாட் டிஸ்கும் நினைவகமாகச் செயற்படும் இதனையே பேஜ் பைல் / ஸ்வொப் பைல் (Swap file) அல்லது


வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) எனப்படுவது
அதேபோல் ஹாட் டிஸ்கிலுள்ள ஒவ்வொரு பைல் பற்றிய விவரங்களையும் கொண்டிருக்கும் ஒரு அட்டவணையே Master File Table (MFT) எனப்படுகிறது. இது ஹாட் டிஸ்கில் நிரந்தரமாக ஓரிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
இந்த MFT பைல் மற்றும் பேஜ் பைல்கள் இடமாற்றம் செய்ய முடியாத பைல்களாக விண்டோஸில் அடையாளமிடப்படுகின்றன.
ஹாட் டிஸ்கில் பைல் சேமிக்கப்படும்போது, இயங்கு தளம் எங்கெல்லாம் வெற்றிடம் காணப்படுமோ அவ்விடங்களில் புதிய பைல்களை சேமித்து விடும். ஹாட் டிஸ்கின் வெற்றிடத்தைப் பொறுத்தும் பைலின் அளவு பெரிதாக இருக்கும் பட்சத்திலும் அந்த பைல் முழுமையாக அல்லாமல் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிதறலாக சேமிக்கப்படும். இதனையே ப்ரேக்மண்ட்ஸ் (Fragments) எனப்படுகிறது. இந்த பைல் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கணினியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படலாம் அல்லது சில வேளை பைல்களை இழக்கவும் நேரிடலாம். ஹாட் டிஸ்கை ஒரு குறித்த் கால இடைவெளிகளில் டிப்ரேக்மண்ட் செய்து கொள்வதன் மூலம் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்வதற்கென Disk Defragmenter எனும் யூட்டிலிட்டி விண்டோஸுடன் இணைந்து வருகிறது.
டிப்ரேக்மண்ட் செய்யும்போது அங்கொன்று இங்கொன்றாக சிதறிக் கிடக்கும் ஒரு பைலின் பகுதிகள் அருகருகே தொடர்ச்சியாக அமையும் வண்ண்ம் இடமாற்றம் செய்யப்படுகின்றன.
டிப்ரேக்மண்ட் செய்யும்போது, டிப்ரேக்மண்ட் விண்டோ டிஸ்க் மேப்பில் (Disk Map) பச்சை நிறத்தில் சில பகுதிகளைக் காண்பிப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இடமாற்றம் செய்ய முடியாத் பைல்கள் உள்ள இடங்களையே விண்டோஸில் இவ்வாறு காண்பிக்கப்படுகிறது.. ஏனைய பகுதிகளை டிப்ரேக்மண்ட் செய்த பிறகும் இந்த அன்மூவபல் பைல்கள் ஹாட் டிஸ்கில் முன்னர் இருந்த இடத்திலேயே சிதறலாகக் இருக்கும்.
பேஜ் பைல் அலல்து ஸ்வொப் பைல்களை டிப்ரேக்மண்ட் செய்ய முடியாது என்பதால் அவற்றை அழித்து விட்டு டிப்ரேக்மண்ட் செய்யலாம். எனினும் அவற்றை வழமையான முறையில் அழிக்கவும் முடியாது. அவற்றை அழிப்பதற்குப் விண்டோஸில் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். Control Panel System Advanced tab Performance Settings Advanced tab Change தெரிவு செய்யுங்கள். அங்கு Virtual Memory என்பதன் கீழ் No paging file தெரிவு செய்து Set என்பதைக் க்ளிக் செய்யுங்கள். பின்னர் கணினியை மறுபடி இயக்கி டிப்ரேக்மண்ட் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம்.
டிப்ரேக்மண்ட் செய்த பிறகு மேற்சொன்னவாறு Virtual Memory எனுமிடத்திற்குப் பிரவேசித்து Custom size என்பதைத் தெரிவு செய்து Initial size மற்றும் Maximum size எனுமிடங்களில் ஒரே அளவான ஹாட் டிஸ்கில் இடத்தை ஒதுக்குங்கள். இந்த அளவானது, கணினியின் பிரதான நினைவகத்தின் இரண்டு முதல் நான்கு மடங்காக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
ஹாட் டிஸ்கிலுள்ள் மற்றுமொரு இடமாற்றம் செய்ய முடியாத் பைல் வகையான MFT எனும் பைல் அட்டவணையாகும்.. ஹாட் டிஸ்கில் பைல்களின் அளவு அதிகரிக்கும்போது இந்த MFT யின் அளவும் அதிகரிக்கிறது. இந்த MFT பைலும் அதன் உச்ச அளவைத் தாண்டும் போது சிறு சிறு பகுதிகளாக்கப்படுகிறது.
ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றததைச் செய்வதன் மூலம் MFT பைலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள் இடத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் Start → Run → regedit ஊடாக ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் (Registry Editor) திறந்து HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ CurrentControlSet\Control\Filesystem வரை பயணித்து NtfsMftZoneReservation என்பதை டபள் க்ளிக் செய்து அதன் வலது புறம் 2 முதல் 4 வரையிலான ஒரு இலக்கத்தை உள்ளீடு செய்யுங்கள். இரண்டை டைப் செய்வதன் மூலம் 25 வீதத்தையும் 3 ஐ டைப் செய்வதன் மூலம் 37.5 வீதத்தையும் 4 ஐ உள்ளீடு செய்வதன் மூலம் 50 வீதத்தையும் ஹாட் டிஸ்கில் ஒதுக்கலாம்.

என்ன இந்த BIOS?

http://xtreview.com/images/bios-recovery-dell.jpg 

கணினியை இயங்க ஆரம்பித்ததும் ப்ரோசெஸ்ஸரினால் முதன் முதலில் அணுகப்படும் ஒரு ப்ரோக்ரமே (BIOS) பயோஸ் எனப்படுகிறது. BIOS என்பதன் சுருக்கம் Basic Input / Output System எனபதாகும். அதன் மூலம். நினைவகம், ஹாட் டிஸ்க், மற்றும் துணைச் சாதனங்கள் அனைத்தும் முறையாக இயங்குகிறதா என்பதைச் சரி பார்த்து உறுதி செய்து கொள்ளும். பயோஸ் ஆனது கணினியிலுள்ள இயங்கு தளத்திலிருந்து வேறுபட்டது. ஹாட் டிஸ்கில், சேமிக்கப்பட்டிருக்கும். இயங்குதளம் கணினிக்கும் அதனைப் பயன் படுத்துபவர்களுக்குமான ஒரு இடை முகப்பை வழங்கிறது. எனினும் பயோஸ் ப்ரோக்ரமானது கணினி மதர்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் ரொம் (Read Only Memory) எனும் நினைவக (Chip) சிப்பில் சேமிக்கப்பட்டிருக்கும். கணினியை ஓன் செய்ததும் கணினியைக் கட்டுப்படுத்தி பின்னர் ஹாட் டிஸ்கிலுள்ள இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்றி கணினியை ஆரம்பித்து வைக்கிறது பயோஸ். இதனை Firmware எனவும் அழைப்பதுண்டு. ஏனெனில் இதில் நாம் மாற்றங்கள் செய்ய முடியாது. கணினியில் பயோஸிற்கு பல பணிகள் வழங்கப் பட்டிருந்தாலும் இயங்கு தளத்தை ஆரம்பித்து வைபபதே அதன் முக்கிய பணியாகும். கணினியை இயக்கியதும் பயோஸ் மைக்ரோ ப்ரொசஸருக்கு அதன் முதல் அறிவுறுத்தலை வழங்குகிறது. அனைத்து வன்பொருள்களும் முறையாகக இயங்குகிறதா என்பதை சுய பரிசோதானை செய்து கொள்ளும். இதனை Power On Self Test (POST) எனப்படுகிறது ஹாட் டிஸ்க், சீடி ரொம் போன்றவற்றை இனம் காணுதல், நினைவகத்தின் அளவை சோதித்தல், ப்ரோசெஸ்ஸரின் வேகத்தை அளவிடல் கடிகாரம் மற்றும் முக்கிய செட்டிங்க்ஸ் என்பவற்றை நிர்வகித்தல். கிரபிக்ஸ் காட் (Graphics Card) , சவுண்ட் காட் (Sound Card) போன்ற எனைய சாதனங்களில் பொருத்தப் பட்டிருக்கும் இது போனற வேறு பயோஸ் சிப்புகளை ஆரம்பித்து வைத்தல் அவற்றின் ஏனைய பணிகளில் அடங்குகின்றன..

கணினியை இயக்கியதும் ஆரம்பிகும் பயோஸ் ப்ரோக்ரமுடைய வழமையான பணி ஒழுங்கில் CMOS ஐ பரிசோத்திப்பதன் மூலம் பயனர் தெரிவுகளில் ஏதாவது மாற்றங்கள் உள்ளதா என்பதைப் பரிசோதித்தல் மின் வழங்கியை நிவகித்தல் (Power Management), மற்றும் எந்த ட்ரைவிலிரிருந்து இயங்கு தளத்தை ஆரம்பிப்பது (Boot Sequence) என்பதைத் தீர்மானித்தல் போன்ற பல பணிகள் அடங்குகின்றன. தேதி, நேரம் மற்றும் ஏனைய கணினியின் செட்டிங்ஸ் விவரங்களை பேட்டரி மின்சக்கதியில் இயங்கும் ஒரு நினைவக சிப்பில் சேமிக்கிறது. இதனை (CMOS) சிமோஸ் எனப்படுகிறது. BIOS (Basic Input/Output System) என்பதும் CMOS (Complementary Metal Oxide Semiconductor) என்பதும் ஒன்றையே குறிப்பதாகப் பலரும் தவறாகக் எண்ணுகின்றன்ர். இவற்றிற்கிடையே தொடர்புகளிருந்தாலும் இரண்டும் வேறு பட்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. . பயோஸ் என்பது கணினியை இயக்கும் அதேவேளை தேதி, நேரம் மற்றும் செட்டிங்ஸ் விவரங்களை பயோஸ் சேமித்து வைக்குமிடமே சிமோஸ் எனும் சிப்பாகும். சீமோஸ் என்பது ஒரு வகை நினைவகம்,.

சீமோஸில் மாற்றங்கள் செய்ய கணினியை ஓன் (On) செய்தவுடனேயே கீபோர்ர்டில் குறித்தத ஒரு விசையை அழுத்த வேண்டும். இதற்கான அறிவுறுத்தல் கணினியை ஆரம்பித்த்துமே திரையின் கீழ் எந்த விசையை அழுத்த வேண்டும் என்பதைக் காண்பிக்கும். சீமோஸ் செட்டபில் நுளைந்த்துமே CMOS கணினிப் பயனருக்குப் பல தெரிவுகளைச் செய்ய அனுமதிக்கிறது. தேதி மற்றும் நேரத்தை மாற்றியமைப்பது, கணினியை எந்த ட்ரைவிலிருந்து இயக்கி இயங்கு தளத்தை ஆரம்பிப்பது பூட் செய்யப்படும் ஒழுங்கு (Boot Sequence) , பாஸ்வர்ட் செட்டிங், நினைவக செட்டிங். மின் வழங்கியை நிர்வகித்தல் போன்ற பல செட்டிங்ஸை மாற்ற்ரியமைக்கக் கூடிய வசதியைத் தருகிறது.பயோஸ் ப்ரோக்ரமை காலத்துக்குக் காலம் புதுப்பிக்கவும் (update) முடியும். புதிதாகத் தர்யாரிக்கப்பட்ட ஏதாவது வன்பொருள் சாதனங்களைக் கணினி இனம் காண வேண்டுமானால் அந்த பயோஸை வடிவமைத்த நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து அதன புதிய பதிப்பை டவுன் லோட் செய்து கொள்ள வேண்டும். பயோஸை அப்டேட் செய்வதற்குரிய யூட்டிலிட்டியும் அதனுடன் இணைந்து வரும். யூட்டிலிட்டி ப்ரோக்ரமையும் அப்டேட் பைல்களையும் ஒரு ப்லொப்பி டிஸ்கில் பிரதி செய்து ப்லொப்பியை கணினியில் நுளைத்து இயக்க பழைய பயோஸ் பைல்களை அழித்து புதிதாக நிறுவிக் கொள்ளலாம். . எனினும் பயோஸ் அப்டேட் செய்வதில் கூடிய கவனம் தேவை. தற்போது கணினிகளில் பயோஸை அப்டேட் செய்ய வேண்டிய தேவை அரிதாகவே ஏற்படுகிறது. எனினும் பழைய கணினிகளிலுள்ள பயோஸ் சிப் தற்போது பாவனையிளுள்ள வன்பொருள் சாதனங்களை ஆதரிக்காது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் வந்த கணினிகளில் பயோஸ் ஆனது அதன் ரொம் சிப்பை மாற்றுவதன் முலமே அப்டேட் செய்யப்பட்டது. எனினும் தற்போது EEPROM (Electrically Erasable Programmable Read-Only Memory எனும் நினைவக சிப்பிலேயே சேமிக்க்கப்படுவதால ரொம் சிபை மாற்றாமலேயே தேவையேற்படின் பயோசை அப்டேட் செய்து கொள்ள லாம்.

இணையம் – தெரிந்ததும் தெரியாததும்

http://thumbs.dreamstime.com/thumb_6/1107563462lhLz9R.jpg
உலகின் மிகப் பெரிய கணிணி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சர்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன. ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கணினியூடாக பைல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணினி வலையமைப்பு அதி வேகம் கொண்ட கேபல் கொண்டிணைக்கப்பட்டுள்ளன. இதனை Internet Backbone எனப்படுகிறது.
பல்வேறு வகையான பல்வேறு அளவுகளைக் கொண்ட பல்வேறு இயங்கு தளங்களைக் கொண்ட ஆயிரக் கணக்கான கணினிகள் இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ளன. இவற்றை சேர்வர் கணினிகள் எனப்படும்.
பல்வேறு வகையான கணினிகள் இணையத்தில் இணைந்துள்ள போதும் அவற்றிற்கிடையே TCP/IP (Transmission Control Protocol /Internet Protocol) எனும் பொதுவான ஒரு விதிமுறை பின்பற்றப்படுவதன் காரணமாக நாம் எந்த ஒரு கணினியிருந்தும் மற்றுமொரு கணினியுடன் இலகுவாகத் தொடர்பாட முடிகிறது. .
இராணுவ தேவைக்காக அமெரிக்காவினால் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பே பின்நாளில் இண்டர்நெட்டாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் இந்தக் கணினி வலையமைப்பு ARPANET என அழைக்கப்படது.
தற்போது இணையத்தின் உரிமையாளராக எந்த ஒரு நாடோ நிறுவனமோ இல்லை எனினும் இணையத்தின் வளர்ச்சிக்காகவும் இணையத்தில் விதி முறைகளை நிர்ணயிக்கவும் முறைப்படுத்தவுமென சில தன்னார்வநிறுவனங்கள் ஈடு பட்டு வருகின்றன.
இணையத்தின் மூலம் கிடைக்கும் சில பொதுவான பயன்பாடுகளாக எந்த வொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல், மின்னஞ்சல் சேவை, நிகழ் நேரத்தில் ஒருவரோடொருவர் உரையாடுதல், பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல், இசை, திரைப்படம், விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடு படல் பொருட்கள் மற்றும் சேவைகளைப பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்திலீடுபடல் போன்ற பல வற்றைக் குறிப்பிடலாம்.
இணையம் சார்ந்த சில கலைச் சொற்ளையும் அவற்றிற்கான விளக்கத் தையும் பார்ப்போம்.
Asymmetric Digital Subscriber Line (ADSL) : அதி வேக இணைய வசதியை வழங்கும் ஒரு இணைய இணைப்பு முறை. இதனையே Broadband எனவும் அழைக்கப்படுகிறது.
Blog : web Log என்பதன் சுருக்கமே ப்லோக். இதனை ஓன்லைன் ஜேர்னல் (online Journal) எனப்படுகிறது. இது இணைய தளம் போன்ற்தே. இணைய தள வடிவாக்கம் பற்றி அறியாதவர்கள் கூட இதனை இலகுவாக உருவாக்கலாம். இந்த சேவையை blogspot.com, wordpress.com என்பன இலவசமாக வழங்குகின்றன. தமிழில் வலைப்பதிவு எனப்படுகிறது.
Browser இணைய சேவைகளில் ஒன்றான உலகலாவிய வலைத் தளமமான WWW ஐ அணுகுவதற்குப் பயன்படும் மென்பொருளையே பிரவுஸர் (இணைய உலாவி) எனப்படுகிறது. உதாரணம்: இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ், கூகில் க்ரோம்
Download : இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒரு கணினியிலிருந்து எமது கணினிக்கு பைல் ஒன்றைப் பெற்றுக் கொள்வதை டவுன்லோட் எனப்படும். Domain Name இணையத்தில், இணைந்துள்ள கணினிகளை அல்லது இணணய தளங்களை இலகுவாக நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் ஐபி முகவரி எனும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையை டொமேன் நெம் எனப்படுகிறது.
Dial-up: இணையத்தில் இணைவதற்குப் பலரும் நாடும் ஒரு பொதுவான இணைப்பு முறை. இணைய சேவை வழங்கும் நிறுவன கணினியை ஒரு மோடமைப் பாவித்து தொலைபேசிக் கம்பியூடாக இணைப்பக்கப்ப்டும். அதிக பட்சமாக 128 kbps அளவிலான வேகத்தையே கொண்டிருக்கும்.
E-mail (Electronic mail) : கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பிரபலமான இணைய சேவையே மின்னஞ்சல் ஆகும். மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் ஒரு மின்னஞ்சல் முகவரி அவசியம். ஒரு மின்னஞ்சல் முகவரி jeesa@gmail.com எனும் வடிவில் இருக்கும். இங்கு பயனர் பெயரும் டொமேன் பெயரும் @ எனும் குறியீட்டால் பிரிக்கப்படும். Extranet : ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. இது இணையத்தோடு தொடர்புபட்டிருக்கும். அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மட்டுமன்றி பொது மக்களும் உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லோடு இதனை அணுக முடியும்.
FTP : (File Transfer Protocol) இணையம் வழியே பெரிய அளவிலான பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளும் சேவையை FTP எனப்படுகிறது.
File attachment மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பப்படும் சிறிய ஆவணங்கள் மற்றும் படங்களை எட்டேச்மண்ட் எனப்படுகிறது.
Firewall இணையத்தைப் பயன்படுத்தி எமது கணினிக்குள் அனுமதியின்றி எவரும் ஊடுறுவாமல் தடுக்கும் மென்பொருளை பயவோல் எனப்படுகிறது.
Hyperlink : இணைய தள மொன்றில் ஒரு பக்கத்திலிருந்து மற்றுமொரு பக்கத்திற்கு அல்லது வேறொரு இணைய தளத்திற்கு வழங்கப்படும்
இணைப்பை ஹைபலின்க் எனப்படுகிறது.
HTTP (Hypertext Transfer Protocol) உலகலாவிய வலைத் தளத்தில் HTML ஆவணங்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான விதி முறையாகும்.
HTML (Hypertext Markup Language) வலைத்தளங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு கணினி மொழி.
Home Page ஒரு இணைய தளத்தின் முதல் பக்கத்தை அல்லது இணைய உலாவியைத் (வெப் பிரவுஸர்) திறக்கும் போது வரும் முதல் பக்கத்தை ஹோம் பேஜ் எனப்படுகிறது,.
Hacker ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள ஒரு கணினியின் பாதுகாப்பு ஓட்டைகளை நன்கறிந்து அக்கணினியினுள் அனுமதியின்றி நுளையும் ஒரு கை தேர்ந்த நபர் ஹெக்கர் (குறும்பர்). எனப்படுகிறார். பாதுகாப்புத் தன்மையைப் பரீட்சிப்பதற்காகவும் ஹெக்கர்களின் உதவியை நாடுவதுண்டு.
Instant Message (IM): இணையததைப் பயன் படுத்தி நிகழ் நேரத்தில் இருவருக்கிடையில் நிகழ்தப்படும் உரையாடலை உடனடி செய்திச் சேவை எனப்படுகிறது. உதாரணம் : யாஹூ மெஸ்ஸென்ஜர், ஸ்கைப்
Internet Service Provider (ISP):இணைய சேவை வழங்கும் நிறுவனத்தையே ISP எனப்படுகிறது. நமது கணினியை இணையத்துடன் இணைக்கும்போது இந்த நிறுவனத்தின் கணினியூடாகவே நம் இணையத்தில் இணைகிறோம்.
IP (Internet Protocol) address இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒவ்வொரு கணினியையும் வேறு படுத்திக் காட்டும், ஒரு இலக்கமே ஐபி முகவரி எனப்படுகிறது. இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். (உதாரனம்: 169.254.222.1). ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருகும்.
ISDN (Integrated Services Digital Network) டயல் அப், ப்ரோட்பேண்ட் போன்று ஒரு வகை இணைய இணைப்பாகும். இது டயல் அப்பை விட வேகமானது. ப்ரோட்பாண்டை விட வேகம் குறைந்தது. இது ஒரு டிஜிட்டல் சேவை என்பதால் மோடெம் அவசியமில்லை.
Intranet ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்களால் மட்டுமே இதனை அணுக முடியும். இது இணயத்தோடு தொடர்பு பட்டுமிருக்கலாம். தொடர்பு படாமலும் இருக்கலாம். எனினும் பொது மக்க்ள் யாரும் இந்த இந்த வலையமைப்பை அணுக முடியாது,
Modem: என்லொக் வடிவில் டேட்டாவை ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு தொலைபேசிக் கம்பியூடாக அனுப்புவதற்கு மோடெம் எனும் சாதனம் பயன் படுத்தப்படுகிறது, இது டிஜிட்டல் வடிவிலுள்ள் டேட்டாவை (analogue) எனலொக்காகவும் (modulation) எனலொக் வடிவிலுள்ளதை டிஜிட்டல் (demodulation) வ்டிவிலும் மாற்றுகிறது.
Offline: கணினி இணையத்தில் இணைந்திராத சந்தர்ப்பத்தை ஓப்லைன் எனப்படுகிறது. . Online: இணையத்தில் எமது கணினி இணந்திருக்கும் போது கணினி ஓன்லைனில் இருப்பதாகச் சொல்லப்படும்.
Password: ஒரு பைலை, கணினியை அல்லது வலையமைப்பை அதிகாரமளிக்கப்பட்வர்கள் மாத்திரம் அனுகுவதற்குப் பயன்படும் எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்ட ஒரு ரகசிய சொல்.
Portal: மின்னஞ்சல், தேடற்பொறி ,போன்ற பல வகைப்பட்ட சேவைகளை வழங்கும் ஒரு இணைய தளத்தை வெப் போட்டல் எனப்படுகிறது. உதாரணம் : யாஹூ
Server ஒரு வலையமைப்பில் தனது வளங்களையும் தகவல்களையும் ஏனைய கணினிகளுடன் பகிர்ந்து கொள்ளும் கணினிகளை சேர்வர் அல்லது Host ஹோஸ்ட் எனப்படுகிறது.
Search Engine வேர்ல்ட் வைட் வெப் எனும் உலகலாவிய வலையமைப்பில் எமக்குத் தேவையான தகவல்கள் எந்த வலைத்தளங்களில் உள்ளன என்பதை தேடிப் பட்டியலிடும் மென்பொருளையே தேடற் பொறி எனப்படுகிறது. உதாரணம் : கூகில், யாஹூ, பிங்
Sub Domain: டொமேன் பெயரில் ஒரு பகுதியே சப் டொமேன் எனப்படுகிறது. உதாரணமாக madeena.sch.lk, என்பதில் sch என்பது பிரதான டொமேன் எனவும் madeena என்பது சப்டொமேன் எனவும் அழைக்கப்படுகிறது.
Spam எமக்குத் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து நாம் கேட்காமலேயெ எமது மின்னஞ்சல் முகவ்ரிக்கு வந்து சேரும் வேண்டாத (குப்பை) மின்னஞ்சல்களையே ஸ்பாம் எனப்படுகிறது.
Top-level domains: டொமேன் நேம் சிஸ்டம் எனப்படும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையில் ஒரு பிரதான பிரிவே டொப் லெவல் டொமேன் எனப்படுகிறது. உதாரணம் .com, .gov, .edu.
Uniform Resource Locator (URL): உலகலாவிய வலைத் தளத்தில் உள்ள ஒரு ஆவணத்தின் முகவரியைக் குறிக்கிறது. இதனையே வெப் எட்ரஸ் எனவும் அழைக்கப்படுகிறது. உதாரணம்
Upload இணையத்தில் அல்லது வலையமைப்பொன்றில் ஒரு கணினியிலி ருந்து மற்றுமொரு கணினிக்கு பைல் ஒன்றை அனுப்புவதை அப்லோட் எனப்படுகிறது..
World Wide Web ஹைப டெக்ஸ்ட் ஆவணங்களையும் தரவுத் தளங்களையும் கொண்ட இணைய சேர்வர்களையே வேர்ல்ட் வைட் வெப் (உலகலாவிய வலத்தளம்) எனப்படுகிறது. இது 1989 ஆம் ஆண்டு Tim Berners-Lee, எனும் பிரித்தானியரால் வடிவமைக்கப்பட்டது.
Website : HTML எனும் வலை மொழி கொண்டு உருவாக்கிய, ஹைபடெக்ஸ்ட் ஆவணத்தையே இனையதளம் (வெப்சைட்) எனப்படுகிறது. இந்த ஆவணம் ஒரு நிறுவனம் சார்ந்த அல்லது தனி நபர் சார்ந்த அல்லது ஏதோவொரு விடயம் சார்ந்த தகவல்களைக் கொண்டிருக்கும். இது ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்களையோ (web pages) கொண்டிருக்கும் இவை ஹைபலிங் கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். இதனை இணையத்தில் இணைந்திருக்கும் ஒரு வெப் சேர்வரில் சேமிக்கப்படும். அந்த இணைய தளத்திற்கெனப் பதிவு செய்யப்படும் பெயரைக் கொண்டு (வெப் எட்ரஸ்) கொண்டு அந்த தளத்தை உலகின் எப்பாகத்திலிருந்தும் அணுகலாம்.

எம்.எஸ்.ஆபீஸ் 2010 தொகுப்ப

மைக்ரோசாப்ட் நிறுவனம் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பின் சோதனைத் தொகுப்பினைத் தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட 15 நாட்களில் 10 லட்சம் பேர் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தனக்கு பெருமைக்குரிய விஷயமாக மைக்ரோசாப்ட் கருதுகிறது. வரும் ஜூன் மாதம் இது பொது மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரும். ஆறு வகைகளில்(Starter, Home and Student, Home and Business, standard, Professional and Professional Plus) இது விற்பனை செய்யப்படும்.

இதில் ஒரு வகை வேர்ட் மற்றும் எக்ஸெல் தொகுப்புகள் அடங்கியதாகவும், அடிப்படை பயன்பாட்டி னைக் கொண்டதாகவும் கொண்டு இலவசமாகத் தரப்படும். இதில் விளம்பரங்களும் இருக்கும். வர இருக்கும் ஆபீஸ் தொகுப்பு என்ன விலையில் இருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

உங்களுக்கும் இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்க ஆசையாக இருந்தால், http://www.microsoft. com/office/2010/en/default.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

இந்த ஆபீஸ் தொகுப்பில் என்னவெல்லாம் புதியதாக உள்ளன என்று தெரிய பல தளங்கள் உள்ளன. http://www.neowin. net /news/main/09/11/18/microsoftoffice2010topnewfeaturesஎன்ற முகவரியில் உள்ள தளத்தில் சிறப்பான தகவல்கள் உள்ளன.

Send To மெனுவில் உங்கள் போல்டர்


விண்டோஸ் எக்ஸ்பீயில் ஒரு பைல் மீது ரைட் க்ளிக் செய்ய வரும் மெனுவில் Send To எனும் கமாண்ட் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த Send To கமாண்ட் மூலம் ஒரு பைலை இலகுவாக இ-மெயில் செய்யவோ, டெஸ்க்டொப்பிற்கு ஒரு Shortcut ஐ உருவாக்கவோ, அல்லது புலொப்பி ட்ரைவ் அல்லது பென் ட்ரைவிற்குப் பிரதி செய்யவோ முடியும்.

சில வேளைகளில் அந்த பைலின் பிரதியொன்றை குறிப்பிட்ட ஒரு போல்டரில் சேர்க்க வேண்டிய தேவையும் ஏற்படலாம். உங்கள் பைல்களை நீங்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட போல்டரிலேயே சேமிப்பதானால் அந்த போல்டரின் பெயரையும் Send To மெனுவில் சேர்த்து விடலாம்.

இதன் மூலம் உங்கள் வேலை இலகுவாவதுடன் மேலுமொரு விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் விண்டோவைத் திறந்து ஒரு போல்டரிலிருந்து இன்னுமொரு போல்டருக்கு பைலைப் பிரதி செய்யும் வேலையும் தவிர்க்கப்படுகிறது.

உங்கள் போல்டரை Send To மெனுவில் சேர்க்க நீங்கள் செய்ய வேண்டியது :

முதலில் மை கம்பியூட்டரைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபில் க்ளிக் செய்து Show hidden files and folders என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றுங்கள்.

பின்னர் மை கம்பியூட்டர் விண்டோவில் (C:) ட்ரைவில் உள்ள Documents and Settings போல்டரைத் திறந்து உங்கள் User Account க்குரிய போல்டரையும் திறந்து கொள்ளுங்கள். அங்கு Send To எனும் போல்டரைக் காணலாம்.

பின்னர் Send To போல்டரைத் திறந்து அதனுள் File - New - Shortcut ஊடாக நீங்கள் Send To மெனுCல் சேர்க்க விரும்பும் போல்டருக்கு ஒரு Shortcut ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள். இப்போது எதேனுமொரு பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து Send To தெரிவு செய்ய அங்கு நீங்கள் Shortcut உருவாக்கிய போல்டரையும் காணலாம்

Karoaké இசையை உருவாக்குவது எப்படி?

நீங்கள் குரல்வளம் மிக்கவரா? அல்லது பாடல்களை பாடி பதிவு செய்யவேண்டும் என்ற ஆவல் உடையவரா? ஆமென்றால் உங்களிடம் இருக்கும் பாடல்களில் இருக்கும் குரலை நீக்கி அதில் உங்கள் குரலில் பாடி அசத்தவேண்டும் அல்லவா? அதற்கு முதலில் நீங்கள் உங்களிடம் இருக்கும் பாடலில் உள்ள குரலை நீக்கவேண்டுமல்லவா?. இதற்கென உள்ள பல மென்பொருட்கள் விலைகொடுத்து வாங்கவேண்டியுள்ளது சான்றாக,  Adobe Audition, Sony Sound Forge  முதலியன. ஆனால் இதை Audacity மூலமாக இலவசமாகவே செய்யமுடியும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.  இதோ கீழேஉள்ள வீடியோவை பார்க்கவும். பின்னர் பாடி அசத்தவும்….  மறக்காமல் வாக்களிக்கவும்



Dec 27, 2009

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து  அவரின் எண்ணுக்கே call  செய்யும் Hacking

உங்கள் நண்பர் அவருடைய எண்ணில்  இருந்தே கால் வருவதை பார்த்து அதிர்ச்சி அடையவைக்கலாம் .


இதுவும் மிகவும் எளிய வழிதான் .

முதலில்
http://www.mobivox.com 
இந்த வலைத்தளம் சென்று Register செய்துகொள்ளுங்கள் அப்போது அவர்கள் கேட்கும்   mobile number  ல் உங்கள் நண்பரின் எண்ணை பதிவு செய்துகொள்ளுங்கள் .  மேலும் அவர்கள் கேட்கும் விவரங்களை  நிரப்புங்கள்

அதில்


 அவர்கள் கேட்க்கும் மெயில் முகவரியை கொடுத்ததும் அந்த மெயில் முகவரிக்கு அவர்கள் ஒரு மெயில் அனுப்பி account conformation செய்வார்கள் , அந்த link கிளிக் செய்து மீண்டும் அந்த  இணையதளம் சென்று



உங்கள் மெயில் முகவரி சீக்ரட் நம்பர் கொடுத்து உள்ளே நுழைந்து Add Contact தேர்வு செய்து உங்கள் பெயர் எண் கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்

பிறகு call button அழுத்துங்கள்  உங்கள் நண்பரின் எண்ணுக்கு (முதலில் கொடுத்த எண்)  call செல்லும் அவர் பார்க்கும் போது  mobile  அவரது என்னை காட்டும் உங்கள் நண்பர் அதை பார்த்து  அதிர்ச்சி அடைவார் . அப்போது Divert call என்று உங்கள் நண்பரின் எண்ணிலிருந்து  உங்களுக்கு அழைப்புவரும் .

அதை Attend செய்து பேசலாம் ஆனால் உங்கள் நண்பருக்கு அவரது எண்ணில் இருந்து அவருக்கு கால் வருவது மட்டும்தான்  தெரியும் மற்றபடி நீங்கள் கால் attend செய்து பேசும்போதுதான் அவருக்கு யாரிடம் பேசுகிறோம் என்று தெரியும் அதுவரை அவருக்கு எல்லாமே திக் ,திக்,திக் தான் அப்போது குரல் மாற்றி பேசி அவரை கலாய்க்கலாம்   ..  

ஒரு நல்ல வேடிக்கை விளையாட்டு , எச்சரிக்கை யாருக்கும் பாதிப்பு  இதனால் வந்துவிடக்கூடாது ,  இதனை தவறாக பயன்படுத்தினால்           Customer Care மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்  என்பது கூடுதல் தகவல் , நான் எனது நண்பனிடம் இதுபோல் இரண்டு நாட்கள் செய்து அவனிடம் உண்மையை கூறினேன் .

இதற்கு நாம் ஏதும் பணம் செலுத்த தேவையில்லை  இலவசமாக சில நிமிடங்கள் தருகிறார்கள் .   அனைத்து நாடுகளிலும்  இந்த
 வசதி உண்டு.

கூல் ஹாக்கிங்   டிப்ஸ் உங்களுக்காக....

PDF File ஐ பேசவைக்கலாம் வாங்க




PDF   File Tricks இது ரொம்ப சின்ன விஷயம்   எப்படி என்று பார்க்கலாம்

உங்களிடம்  இருக்கும் Adobe reader 6.0   version + அதற்கு மேற்பட்ட  Version இருக்கவேண்டும்  இதுதான் முக்கியம்.  தற்போது Adobe reader 9.0  பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகிறோம் .
ஏதேனும் ஒரு PDF File லை    Adobe reader இல் Open செய்து பிறகு

View  சென்று Read out Loud தேர்வுசெய்து Active Read Out Loud Click   செய்தால் போதும் PDF File பேச ஆரம்பித்துவிடும் .

சரியாக இயங்காவிட்டால்  கீழ்க்கண்ட Short cut பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக பேசவைக்கலாம் .


Keyboard Shortcuts  (விண்டோஸ் , MAC OS இரண்டுக்கும் )




1.Ctrl+Shift+V     -- Read this Page only

2.Ctrl+Shift+B   -- Read till End of Document

3.Ctrl+Shift+C  -- Pause Reading

4.Ctrl+Shift+E   -- Stop Reading

எப்படி PDF File வார்த்தைகள் படிக்கப்படுகின்றன ?

Read Out Loud என்ற தொழில்நுட்பம் மூலம் இது நடைபெறுகிறது . "screen reader"தொழில்நுட்பம் போன்றது .   நமது கணினியில் உள்ள (ஆண் )Voice மூலம் படிக்கிறது .  நாம்  வேறு அழகிய voice  Download செய்து மாற்றிக்கொள்ளலாம் .  Adobe Reader தமிழ் மொழி PDF படிக்காது என்பது  நமக்கு வருத்தாமான விஷயம் ,..

Dec 25, 2009

ஆன்லைனில் எளிதாக அனிமேட்டட் வீடியோவை உருவாக்க

நீங்களே சொந்தமாக அனிமேட்டட் வீடியோவை உருவாக்க வேண்டுமா?

MeMoov என்பது ஒரு இலவச ஆன்லைன் அனிமேஷன் ஸ்டுடியோ ஆகும். இதை உபயோகித்து அனிமேட்டட் வீடியோவை உருவாக்க பெரிய தொழி நுட்ப அறிவு தேவையில்லை. இதில் தரப்பட்டுள்ள சீன், மனிதர்கள், முகபாவனைகள், உருவங்கள் ஆகியவற்றை நாம் நடக்க வைப்பது, நம்முடைய சொந்த குரலை உபயோகித்து பேச வைப்பது என சிறிய வீடியோவை எளிதாக உருவாக்கலாம்.

சுட்டி கீழே தரப்பட்டுள்ளது. 





மூன்று I.T செய்திகள்!


 பிராசஸரும் மார்கெட்டில் இருக்கு என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இன்டெலுக்கு அடுத்து AMD-தான்.


AMD, இன்டெலுக்கு மார்க்கெட்டில் tough fight கொடுப்பதால்தான் ஏதோ நீங்களும், நானும் கணினி வாங்க முடியுது.

இல்லாட்டி நோஞ்சான் பிராஸசரை, அநியாய விலைக்கு வாங்க வேண்டும்.

அதனால்தான், AMD-யை நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பெரிய Thanks சொல்லனும்.

சரி! இப்ப எதுக்கு AMD-யை இழுக்கனும். AMD கம்பெனி ஆரம்பித்து 40 வருடம் ஆகிவிட்டதுHappy Birthday AMD!

அடுத்த 40 வருடத்தில் AMD-யோ இன்டெலோ இருக்குமான்னு சொல்லவே முடியாது. அவ்வளவு வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.


2. முக்கி முனகி இப்பத்தான் முதல் முறையாக desktop மார்கெட்டில் 1 சதவீதம் பங்கை லினக்ஸ் அடைந்திருக்கிறது என்று Net Applications என்ற கம்பெனி மதிப்பிட்டு இருக்கிறது.


இலவசமாக கொடுத்தே இந்த நிலைமை. அப்ப லினக்ஸ் அவ்வளவுதானா?

இதை ஆயிரக்கணக்கான சர்வர்களில் லினக்ஸ் மட்டுமே வைத்துக்கொண்டு சர்ச், ஜீமெயில், மேப்ஸ்னு செமையா அமர்க்களம் செய்துகொண்டு, மற்ற கம்பெனிகள் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் கூகிள் கிட்டே போய் கேளுங்க.


3. இந்த எழவு வைரஸ் எப்படிதான் வந்துதோ என்று விஷயம் தெரியாமல் தலையில் அடித்துக் கொள்பவர்களுக்கு இனிப்பான செய்தி.

சாதா சிடி, டிவிடி தவிர வேறு எந்த removable media-விற்கும் விண்டோஸ் 7-லிருந்து autorun வசதி default-ஆக கொடுக்கப் போவதில்லை என்று மைக்ரோசாஃப்ட் சொல்லியிருக்கிறது.

இந்த autorun வசதியை வைத்துக் கொண்டு தன் சந்ததியை இஷ்டத்துக்கு பெருக்கிக் கொண்டு கும்மாளம் அடித்த வைரஸ், மால்வேர், ஸ்பைவேர்லாம் தங்களுக்கு வரப்போற சோதனையை நினைத்து ரொம்பதான் நொந்து போயிருக்கும்.

CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள இலவச மென்பொருள்




வணக்கம் நண்பர்களே,
அண்மையில் நான் பயன்படுத்தும் கணினியில் , அதிகசக்திவாய்ந்த மென்பொருளை
நிறுவ வேண்டியிருந்தது. ஆனால் எனது கணினியின் நினைவகம் (RAM) குறைவாக இருந்ததால் மென்பொருளை நிறுவ முடியவில்லை. கணினியில் உள்ள வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள விண்டோஸ் இயங்குதளத்தில் வழிமுறைகள் இருந்தாலும் அது போதுமானதாக இல்லை.

கொஞ்ச நஞ்சம் மென்பொருளை பற்றி தெரிந்திருந்தாலும் ,வன்பொருளை பற்றி
அவ்வளாக தெரிந்தது கொள்ள நாம் விரும்புவதில்லை.அதெல்லாம் வன்பொருள் நிர்வாகியின் வேலை என்று விட்டுவிடுவோம்.நானும் அப்படித்தான் இருந்தேன்.இந்த பிரச்சனையால் அந்த அவசியம் ஏற்பட்டது.இணையத்தில் தேடிய போது CPUZ நிறுவனம் இதற்கு ஒரு எளிமையான ,மிகவும் இலகுவான இலவச மென்பொருளை உருவாக்கியுள்ளது.

கணினியை (CPU) திறந்து பார்க்காமலே ,வன்பொருள் பற்றி மிக பயனுள்ள தகல்களை பெறலாம்.உதாரணமாக கணினியில் நினைவகத்திற்கு (RAM) என்று ஒதுக்கப்பட்ட Slots
எத்தனை என்பதையும் அதில் உள்ள RAM பற்றி விவரங்களையும் அறியலாம்.இந்த மென்பொருளை நிறுவத்தேவையில்லை.
Download and Install CPUZ


தரவிறக்கி Unzip செய்து கொள்ளுங்கள்.இப்போது cpuz.exe என்பதனை டபுள் கிளிக் செய்திடுங்கள்.அவ்வளவுதான்.Have Fun :)



சில நொடிகளில் ,உங்கள் கணினியின் வன்பொருளை பற்றி  அனைத்து விவரமும்...
இதில் CPU,Caches,Mainboard,Memory,SPD,Graphics போன்றவற்றின் தகவல்களை காணலாம்.பயன்படுத்தி பாருங்கள்.இனி நீங்களும் ஒரு குட்டி வன்பொருள் நிர்வாகி... 
CPU :

  SPD:

Dec 24, 2009

பன்றிக்காய்ச்சல்


தென்கொரியாவின் அரச மருத்துவப் பல்கலைக் கழகம் ஒன்று ஸ்வைன் என்று பரவலாக அழைக்கப்படும் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தக் கூடிய புதிய தடுப்பு மருந்தொன்றை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றது.
எனினும் இம்மருந்து அமெரிக்காவின் தொற்றுநோய்த் தடுப்பு அமைப்புக்களாலும் (CDC) உலக சுகாதார திணைக்களத்தாலும்(WHO) இன்னமும் ஊர்ஜிதப் படுத்தப்படவில்லை.

இத்தடுப்பு மருந்தானது மரபியல் விஞ்ஞானத்தின்(Genetics) மூலம் முன்னேற்றப்பட்ட ஓர் உயிருள்ள வைரஸ் கிருமியைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இம்மருந்து உடலில் செலுத்தப்படும் போது ஸ்வைன் தொற்றை ஏற்படுத்தும் H1N1 வகைக் கிருமிகளுக்கெதிரான நிர்ப்பீடணத்தை (Vaccine) வழங்கி அவற்றின் பெருக்கத்தைத் தடுக்கும்.

ஸ்வைன் தடுப்பு மருந்தைத் தயாரிப்பதில் உலகளவில் நடைபெறும் போட்டியில் நாமும் எமது எல்லைப் போட்டியாளரைத் தயார் செய்து விட்டோம் என 'சுங்க்னம்' அரச பல்கலைக்கழகக் கல்லூரியின் கால்நடை(veterinary) வைத்திய பீட பேராசிரியர் 'சியோ சங் ஹெயூ' கூறியிருக்கின்றார்.

இத்தகைய புதிய மருந்துகள் யாவும் அங்கீகரிக்கப் பட்ட பின்பும் தரக் கட்டுப்பாடு அளவீடுகளுக்கும் மருத்துவ ஆய்வு கூடங்களில் வெள்ளோட்டத்துக்கும் உட்படுத்தப்பட்டு பின்னர் நாட்டின் உணவு-போதைப்பொருள் தலைமைப் பீடத்தாலும் அனுமதிக்கப்பட்ட பின்பே அமெரிக்காவிலுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் என உலக சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 ஸ்வைன் அறிகுறிகள் -

கணணி பராமரிப்புக்கு 8 ஆலோசனைகள்

உங்கள் கணினிகளை சிறப்பான செயல்திறனுடன் பராமரிப்பாக வைத்திருக்க 8 வழிமுறைகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.தற்போதைய ஐ.டி. உலகில், நம் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் கணினிதான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. கணினியில்தான் பெரும்பாலான நமது நேரம் செலவிடப்படுகிறது.நிதி நடவடிக்கைகள் முதல் நமக்கு பிடித்த இசைகளை கேட்பது வரை அனைத்துமே கணினிவழிதான் நம்மில் பலர் செய்கிறோம். நண்பர்களிடம் உரையாடுகிறோம், மின்னஞ்சல்களை அவ்வப்போது பார்த்து பதில் அனுப்புகிறோம். இந்த நிலையில் கணினி வேலை செய்யாமல் போனால் என்ன ஆகும்?நாம் கணினியில் தற்போது செய்து கொண்டிருக்கும் பணி காணாமல் போய் விடுகிறது. அல்லது நாம் சேமித்து வைத்டிருந்த தகவல்கள் எல்லாம் போய் விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். கணினியில் பணியாற்றும் அனைவருக்கும் தங்களது வாழ்நாளில் இந்த மாபெரும் சிக்கல் ஒரு நாளாவது ஏற்படும் என்பது வழக்கமாகி வருகிறது. இதுபோன்று திரும்பவும் நிகழாமல் இருக்க என்ன செய்வது?இதுபோன்ற நிலையைத் தவிர்த்து, நம் கணினியைப் பேணிப் பராமரிக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம்.
  1. கணினிகளை சீரான இடைவெளியில் ஸ்கேன் செய்யவும்: வாரம் ஒரு முறை ஸ்கேன் டிஸ்க் கொண்டு கணினியை ஸ்கேன் செய்வது மிக முக்கியம். ஸ்கேன் செய்வதால் ஹார்ட் டிஸ்கில் உள்ள பிழைகள் சரி செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
  2. வைரஸ் ஒழிப்பு மென்பொருளை இன்ஸ்டால் செய்யவும்: எந்த ஒரு கணினியும் வேலை செய்யாமல் போகிறதா? அதற்கு முக்கியக் காரணம் வைரஸ் ஊடுருவலே. இதனால் சந்தைகளில் உள்ள வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களை நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்கி இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதேபோல் வைரஸ் ஸ்கேனிங் நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொள்வதும் அவசியம்.சில வைரஸ் ஒழிப்பு மென்பொருட்கள் ஆன்லைனிலேயே கிடைக்கும். ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை. ஏனெனில் இந்த மென்பொருளே ஒரு வைரஸ் பரப்பும் உத்தியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  3. ஃபயர் வால் இன்ஸ்டால் செய்யவும்: இணையதளங்களுக்கு அடிக்கடி செல்லும் பழக்கமுடையவரானால் ஃபயர்வால் இடுவது மிகவும் அவசியம். அதிகாரபூர்வமற்ற, தேவையற்ற விஷயங்கள் உங்கள் கணினிகளை ஊடுருவதிலிருந்து ஃபயர்வால் தடுக்கும். உங்கள் கணினிகளில் உங்களுக்கு தெரியாமலேயே டவுன்லோடு ஆகும் புரோகிராம்கள் குறித்து உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் திறமையான பணியும் ஃபயர்வாலுக்கு உண்டு.விண்டோஸ் எக்ஸ்.பி. மற்றும் விண்டோஸ் விஸ்தா ஆகிய ஆபரேட்டிங் சிஸ்டம்கள் ஃப்யர்வால் வசதியுடனேயே வருகிறது. நாம் அதனை ஆன் செய்து விட்டால் போதுமானது.
  4. டீஃப்ராக் செய்யவும்: டீஃப்ராக்மென்டேஷன் என்பது நம் கணினியின் ஹார்ட் டிஸ்கை ஒழுங்கமைக்கிறது. அதாவது கோப்புகளை தாறுமாறாக ஆங்காங்கே வைக்காமல் அடுத்தடுத்து வைத்து நிறைய காலி இடங்களை ஏற்படுத்திக் கொடுப்பது. இதனால் கணினியின் வேகம் பாதுகாக்கப்படும். நாம் நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கிறோம், அல்லது இன்ஸ்டால் செய்தவற்றை ரத்து செய்கிறோம், கோப்புகளை அடிக்கடி அழிக்கவும் செய்கிறோம். இதனால் டீஃப்ராக் செய்வது மிக அவசியமான ஒரு நடவடிக்கையாகும்.
  5. டிஸ்க்கை சுத்தம் செய்யவும்: உங்கள் கணினியின் செயல் திறன் நன்றாக அமைய டிஸ்க் க்ளீன் அப் மிகவும் அவசியம். நாம் ஏற்கனவே நீக்கி விட்ட கோப்புகளின் எச்சசொச்சங்களையும் இது முற்றிலும் நீக்கி விடும். பழைய கோப்புகள் அதிக இடத்தை அபகரித்துக் கொள்ளாமல் பாதுகாக்கும். டிஸ்க் கிளீன் அப் செய்து முடித்து விட்டுப் பார்த்தால் நமது டிஸ்கில் எவ்வளவு இடங்கள் உள்ளன என்பது நமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கும்.
  6. இணையதள டவுன்லோடுகளை குறைக்கவும்: நாம் இணைய தளங்களிலிருந்து இலவச மென்பொருள் பலவற்றை டவுன்லோடு செய்வோம். அதிகாரபூர்வமற்று இசை இணையதளங்களுக்கு சென்று இசைகளை டவுன்லோடு செய்வோம். இதிலெல்லாம் கணினியை இயங்க விடாமல் செய்யும் மென்பொருட்கள் இருக்கும். எனவே குறைந்த அளவில் டவுன்லோடுகளை வைத்துக் கொள்வது நலம்.
  7. பயன்படுத்தாத புரோகிராம்களை ரத்து செய்யவும்: இனிமேல் இந்த புரோகிராம் தேவையில்லை என்ற நிலை ஏற்படும்போது கன்ட்ரோல் பேனலில் உள்ள ஆட்/ரிமூவ்-ஐ பயன்படுத்தி அதனை நீக்கவும். இதனால் டிஸ்கில் அதிக இடம் கிடைக்கும், கணினியின் செயல்திறன் அதிகரிக்கும்.
  8. கணினியை சுத்தம் செய்யவும்: கணினியின் உட்பகுதிகளில் தூசிகள் மண்டி விடாமல் இருக்க வாரம் ஒரு முறை துணியால் துடைத்து தூசிகளை அகற்றவும். மேலும் கணினியை உஷ்ணம் தாக்காமல் இருக்கும் வகையில் ஒரு அறையில் வைத்திருக்கவும்.

உலவியில் புக்மார்குகளை எளிதாக கையாளுவதற்கு




நமது உலவியில் ஏதாவது வலைப்பக்கத்தை மேய்ந்துக் கொண்டிருக்கும் பொழுது, நாம் ஏற்கனவே சேமித்து வைத்த புக்மார்க்கிலிருந்து வேறு ஒரு பக்கத்தை திறக்க வேண்டுமெனில், மெனு பாரில் சென்றுதான் எடுக்க வேண்டும். சில சமயங்களில் நாம் முழு திரை வடிவில் உபயோகித்துக் கொண்டிருக்கும் பொழுது, மெனு பார் திரையில் தோன்றாது.

இது போன்ற சமயங்களில் நமது புக்மார்க் மெளசின் வலது கிளிக் Context menu வில் கிடைத்தால் எப்படி வசதியாக இருக்கும். இதோ உங்களுக்காக,

உலவும் திரையில் எங்கு வேண்டுமென்றாலும், மெளசை வலது கிளிக் செய்து Context மெனுவிலிருந்து புக்மார்கை திறக்க நெருப்பு நரிக்கான Context Bookmarks 1.4 நீட்சி. தரவிறக்கச் சுட்டி இறுதியில் உள்ளது. 

இதை பதிந்து கொள்வது மிகவும் எளிதானது. இதற்கான ஆப்ஷனில், கீழே உள்ளது போல உங்கள் வசதிக்கு மாற்றிக் கொள்ளலாம். 


  
இனி உங்கள் உலவியின் திரையில் எங்கு வலது கிளிக் செய்தாலும் புக்மார்க்ஸ் இறுதியாக சேர்க்கப்பட்டிருக்கும். 








 
Design by Free Wordpress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Templates